ஒருவன் வாழ்க்கையில் அவனுக்கு பெரிய எதிரியாக இருப்பவை அவனுடைய காம க்ரோதாதிகள் தான். அவற்றை அடக்காதவனுக்கு நிம்மதியும் மகிழ்ச்சியும் இருக்காது. கோபத்தால் மனிதன் தனக்கும் கஷ்டத்தை வருத்திக்கொள்வான் , பிறரையும் புண்படுத்துவான். சிலருக்கு கோபம் ஒரு கணத்தில் வந்து போய் விடும். அவனை உத்தமன் என்பார்கள். சிலருக்கு கோபம் பாதி நாள் வரை இருக்கும். அதைக் குறைத்துக்கொண்டால் நல்லது. சிலருக்கு கோபம் இரவும், பகலும் இருந்துவரும். அவனை அதமன் என்பார்கள். ஒருசிலருக்கு வந்த கோபம் குறையவே குறையாது. வாழ்நாள் முழுவதும் பழிக்குப் பழி வாங்கும் எண்ணம் அவர்கள் மனதில் இருந்துவரும். ஒருநாளும் மன்னிக்க மாட்டார்கள். அவர்களை பாபிஷ்டர்கள் ஷன் யார்?என்பார்கள். அதுபோன்ற வெறி தன்னை யே அழித்து விடும். சிலர் மற்ற வ ருடைய துக்கத்தை தன்னுடைய துக்கமாகக் கருதி, துக்கத்தால் பீடிக்கப்பட்டவனுக்கு தக்க நேரங்களில் எல்லா வகையிலும் உதவி செய்ய துணிந்து விடுவார்கள். நம் முன்னோர்கள் அவனை உத்தம புருஷன் என்று பாராட்டினார்கள். ஆகையால் ஒவ்வொருவரும் தன்
பாராட்டினார்கள். ஆகையால் ஒவ்வொருவரும் தன் மனதில் இருக்கும் காம க்ரோதங்களை கொஞ்சம் கொஞ்சமாக விட்டு விட வேண்டும். தவிர பிறர் துக்கத்தை அறிந்து அவர்களுக்கு ஆறுதலளித்து தக்க நேரத்தில் அளவிற்கு உதவிகளும் செய்ய முன்வர வேண்டும். இவற்றை நன்றாகப் புரிந்துகொண்டு அதன்படியே நடந்துகொள்ள அனைவரையும் ஆசீர்வதிக்கிறோம். ஸ்ரீ ஸ்ரீ பாரதிதீர்த்த மஹாஸ்வாமிகள்.