திருமணப் பொருத்தம் பார்க்கும்போது, மிகவும் முக்கியமான பொருத்தங்களான தினம், கணம், மாகேந்திரம், ஸ்த்ரீதீர்க்கம், யோனி, ராசி, ராசி அதிபதி, வசியம், ரஜ்ஜூ, வேதை என்ற பத்து பொருத்தங்கள் இருக்க வேண்டும். இவற்றில் ரஜ்ஜூப் பொருத்தமும் யோனிப் பொருத்தமும் அனை வருக்கும் அவசியம் இருக்க வேண்டும். இவை இரண்டும் சேர்த்து ஆறு அல்லது ஏழு பொருத்தங்கள் இருந்தாலே வாழ்க்கை நன்றாக அமையும். பெண்ணின் ராசியிலிருந்து ஆறாவது அல்லது எட்டாவது ராசியாக ஆணின் ராசி வரக் கூடாது. இதை சஷ்டாஷ்டகம் என்பார்கள். சூரியன் செவ்வாய் சேர்க்கை ஜாதகத்தில் எந்த இடத்தில் இருந்தாலும் தம்பதியரிடையே பிரிவு ஏற்படும். அது தொழில் நிமித்தமான பிரிவாகவும் இருக்கலாம். செவ்வாய் தோஷத்தை விட மிகக் கடுமையானது இந்தச் செவ்வாய் சூரியன் சேர்க்கை . அதேபோல மற்றொரு கடுமையான தோஷம் சந்திரனும், கேதுவும் ஒரே இடத்தில் இணைந்திருப்பது. இத்தகைய தோஷம் உள்ளவர்களுக்கு அதற்குச் சமமான தோஷம் உள்ள ஜாதகத்தைப் பொருத்த வேண்டும். சுயம்வரா பார்வதி மந்திரத்தை ஜபம் செய்வதும் ஹோமம் செய்வதும் விரைவில் திருமணம் நடக்கவும், திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக அமையவும் சிறந்த பரிகாரங்கள்.
சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் இந்த ஹோமம் செய்வதில் வல்லவர்கள். ஒவ்வொரு திங்கட்கிழமையன்றும் அந்தக் கோயிலில் இந்த ஜபத்தைச் செய்கின்றனர். பாவம் புண்ணியம் என்பதற்குச் சரியான விளக்கத்தை பார்க்கலாமா...பிறர் மனம் புண்படும்படி செய்யப்படும் அனைத்துச் செயல்களும் பாவம். பிறரின் துன்பங்களைப் போக்கி அவர்கள் மனதார உங்களை வாழ்த்தினால் அதுவே புண்ணியம். மக்கள் சேவையே மகேசன் சேவை. அன்புதான் அனைத்து சமயக் கோட்பாடுகளுக்கும் அடித்தளம். 'என்பிலதனை வெயில் போலக் காயுமே அன்பிலதனை அறம்.' மரு மகளைக் கொடுமை செய்யும் பெண்கள் கோயிலுக்குச் சென்று குடம் குடமாகப் பாலாபிஷேகம் செய்தாலும் கடவுளின் அருள் கிடைக்காது. ஜோதிடர்கள் கைப்பட எழுதிய ஜாதகங்களுக்கும் கம்ப்யூட்டரில் கணிக்கப்பட்ட ஜாதகங்களுக்கும் நிறைய வித்தியாசம் வருவது முற்றிலும் உண்மை . பலருக்கும் இந்தக் குழப்பம் ஏற்படுகிறது. கம்ப்யூட்டர் என்பது மனிதனால் உருவாக்கப்பட்ட இயந்திரம். அதில் நாம் பதிவு செய்துள்ள தகவல்களின் அடிப்படையில் அது சற்றுத் துரிதமாகக் கணக்குப் போட்டு நமக்குத் தருகிறது. ஜோதிட மென்பொருட்களை உருவாக்கிய மனிதர்கள் அனைவரும் ஜோதிடக் கலையில் வல்லுனர்களாக இருக்க வாய்ப்பில்லை . ஒருவரின் பிறந்த தேதி, நேரம், இடம் ஆகியவற்றைக் கொண்டு நான்கு இடங்களில் கம்ப்யூட்டர் ஜாதகம் கணித்தால் நான்கும் வெவ்வேறு விதமான ஜாதகங்களை நமக்கு அளிக்கின்றன. எனவே ஒருவரின் ஜாதகத்தைக் கணிப்பதற்கு வாக்கியப் பஞ்சாங்க முறையைப் பின்பற்றி கைப்பட எழுதுவதே சிறந்த முறை. திருக்கணிதப் பஞ்சாங்க அடிப்படையில் ஜாதகம் கணிப்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது. ஒரு ஜாதகத்தை ஜோதிடர் கணித்தாலும் கணினியின் துணைகொண்டு கணித்தாலும் அது வாக்கியப் பஞ்சாங்க முறைப்படி கணித்தால்தான் சரியானதாக இருக்கும். ஜாதகத்தை கம்ப்யூட்டரில் கணிக்கும்போது, அந்த கம்ப்யூட்டரில் வாக்கியப் பஞ்சாங்கம் சாஃப்ட்வேர் இருக்க வேண்டும். சுவீகார தோஷம் என்றால் என்ன? என்று பார்க்கலாமா... குழந்தை இல்லாதவர்கள் ஆதரவு அற்றவர் இல்லத்திலோ அல்லது தெரிந்தவர்கள் மூலமாகவோ குழந்தையைத் தையைத தத்து எடுத்துக்கொள்வதில் எந்தத் தவறும் கிடையாது. சட்ட ரீதியாகவும் சாஸ்திரப்படியும் 'சுவீகாரம்' என்பது அனுமதிக்கப்பட்ட ஒன்று. பழங்காலத்தில் தவிட்டுக்குக் குழந்தை வாங்கும் வழக்கம் இருந்தது என்று கர்ண பரம்பரைக் கதைகள் சொல்கின்றன. வருவது